இன்றைய ராசி பலன்! 20.03.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

20.03.2020 பங்குனி மாதம் 07 ஆம் நாள் வெள்ளிக்கிழமையாகும். ஏகாதசி முன் பகல் 9.04 வரை திருவோணம், மரண முன் இரவு 7.31 வரையாகும். சுப நேரம் காலை 6.17 – 7.47 வரையாகும். எமகண்டம் மதியம் 3.17 – 4.47 வரையாகும். இராகுகாலம் காலை 10.47 – 12.17 வரையாகும். குளிகன் காலை 7.47 – 9.17 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:                உங்களுக்கு எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.திட்டமிடாத காரியங்களால் வீண் செலவுகள் உண்டாகும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். இன்றைய நாள் திட்டங்கள் நிறைவேறும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:              உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். அரை குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:              உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக இலாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். மனதில் பட்டதை தைரியமாக பேசவும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். சொந்த பந்தங்கள் உங்கள் உதவியை நாடி வருவர். இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                 உங்கள் குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதிய பாதையில் பயணிக்கத் விருப்பம் ஏற்படும். நட்பால் பல நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் நன்மை நடக்கும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:              உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு இலாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தள்ளி போன காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். உடல் நலம் பலம் பெரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாளாகும்.

துலாராசி உறவுகளே                உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதிய வீடு வாங்குவீங்கள். நெருக்கமானவர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். இன்றைய நாள் எதிர்பாராத உதவி கிட்டும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                 உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். குடும்ப நபர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கடன் பிரச்சனை தலைதூக்கும். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே                    உங்கள் முன் கோபத்தை குறைக்கவும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். பயணங்கள் சிறப்பாக அமையும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் செழிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். பெற்றோர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். பூர்விக சொத்து வகையில் இலாபம் வரும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

மகர ராசி காரர்களே:                உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் இலாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை திரும்ப பெற முடியும். எதிர்காலம் பற்றிய யோசனை இருக்கும். மற்றவர்களை அனுசரித்து செல்ல பழகிக்கொள்ளவும். இன்றைய நாள் தடைகள் உடைபடும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே                தம்பதியினருக்கு இடையில் வீண் வாக்குவாதம் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டி வரும். அநாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். இன்றைய நாள் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                உங்கள் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். மதிப்பும் மரியாதையும் கூடும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். யாரிடத்திலும் உணர்ச்சி வசப்பட்டு பேசவேண்டாம். விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். உடன்பிறப்புகளின் நலனில் அக்கறைகொள்ளவும். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.