இன்றைய ராசி பலன்! 23.03.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

23.03.2020 பங்குனி மாதம் 10 ஆம் நாள் திங்கட்கிழமையாகும். சதுர்த்தசி பின் பகல் 1.27 வரை பூரட்டாதி, மரண பின் இரவு 1.57 வரையாகும். சுப நேரம் மதியம் 12.16 – 1.46 வரையாகும். எமகண்டம் காலை 10.46 – 12.16 வரையாகும். இராகுகாலம் காலை 7.46 – 9.16 வரையாகும். குளிகன் மதியம் 1.46 – 3.16 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:                  நீங்கள் துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பூர்விக சொத்து மூலம் பணம் வரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சில சமயங்களில் ஞாபக மறதி தொல்லை ஏற்படும். வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பர். உத்தியோகத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.திடீர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகவும். திட்டமிட்ட பயணங்கள் நல்ல படியாக அமையும். இன்றைய நாள் புதிய முயற்சி எடுக்கும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                 உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                  உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உத்தியோகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் இலாபமும் வழக்கம் போலவே காணப்படும். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:               புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். வாக்கு வன்மை கூடும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்லவும். தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் சுபச் செலவு ஏற்படும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. உத்தியோகத்தில் பணிச் சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

துலாராசி உறவுகளே:               குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடையே உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                   தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீங்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். இன்றைய நாள் நன்மைகள் உண்டாகும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                குடும்பத்தில் எதிர்பார்க்கும் சந்தோஷம் கிடைக்கும். நடக்காமல் இருந்த விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படும். இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:              பிள்ளைகள் கேட்பதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். உங்கள் முயற்சிக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோக பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்கவேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:              திடீர் மருத்துவச் செலவுகள் வரும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவும் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். இன்றைய நாள் மகிழ்ச்சி உண்டாகும் நாளாகும்.