" "" "

இன்றைய ராசி பலன் – 02.08.2020

இன்றைய பஞ்சாங்கம்,02-08-2020, ஆடி 18, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 09.29 வரை பின்பு பௌர்ணமி. பூராடம் நட்சத்திரம் காலை 06.52 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் காலை 06.52 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஆடி 18-ம் பெருக்கு. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷ ராசி நேயர்களே:

உடன் பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதியவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:

12.56 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் நன்றி மறந்த சொந்தபந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம்.

மிதுன ராசி காரர்களே:

12.56 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் என்பதால் பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்களைப் பற்றித் தவறாகப் பேசிய உறவினர்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்பார்கள்.வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்சினைகள் வரும்.

கடக ராசி நேயர்களே:

குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தெய்வ வழிபாட்டில் மனம் ஈடுபடும்.பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்த மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட விற்பனை லாபம் குறைவாக இருக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் பணி யாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும்.

கன்னி ராசி காரர்களே:

மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.

துலாராசி உறவுகளே:

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். குடும்பப் பெரியவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.

விருச்சிக ராசி நேயர்களே:

திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள் முடியும். உறவினர் மூலம் கிடைக்கும் செய்தி உங்களை உற்சாகப்படுத்துவதாக இருக்கும்.பிள்ளைகள் கல்விக்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

தனுசு ராசி அன்பர்களே:

வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய மாற்றம் நிகழும். தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

மகர ராசி காரர்களே:

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்சினைகள் வரும். காரியங்கள் முடிவதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறி, அனுகூலமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கும்ப ராசி உறவுகளே:

சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் உண்டாகும்.மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபார வளர்ச்சிக்காக போடும் திட்டங்கள் வெற்றியை அளிக்கும்.

மீன ராசி நேயர்களே:

உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சிலர் வீட்டில் தெய்வப்பணிகளில் பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.