" "" "

இன்றைய ராசி பலன் – 05.07.2020

இன்றைய பஞ்சாங்கம்,05-07-2020, ஆனி 21, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி காலை 10.14 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூராடம் நட்சத்திரம் இரவு 11.02 வரை பின்பு உத்திராடம். சித்த யோகம் இரவு 11.02 வரை பின்பு அமிர்த யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மேஷ ராசி நேயர்களே:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்கவும்.பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.ணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுன ராசி காரர்களே:

வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிட்டும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்து இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும்.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கடக ராசி நேயர்களே:

சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தையைத் தொலைபேசி மூலம் தொடங்குவீர்கள் .பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மற்றவர்களை முழுமையாக நம்பி கொண்டிருக்க வேண்டாம்.

சிம்ம ராசி அன்பர்களே:

அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். வீட்டிலேயே தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்கள் உண்டாகலாம்.உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கன்னி ராசி காரர்களே:

குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீட்டில் அமைதி குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.

துலாராசி உறவுகளே:

இப்போதுதேடிய வேலை கிடைக்கும்.சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள் முடியும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள்.மாலையில் நண்பர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சி தரும் தகவல் ஒன்றை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.உடல் ஆரோக்கியத்தில் இருந்த உபாதைகள் நீங்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள்.உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும்.

தனுசு ராசி அன்பர்களே:

திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிட்டும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள்.பல பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

மகர ராசி காரர்களே:

சிலருக்கு பிள்ளைகள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை உருவாகும்.உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.நீங்கள் எதை பேசினாலும் அதை எல்லோரும் தவறாக புரிந்து கொள்வார்கள்.

கும்ப ராசி உறவுகளே:

குடும்பத்துடன் வீட்டிலேயே தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.சின்ன சின்ன பிரச்சினைகள் அதிகமாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் எளிதில் நடைபெறும்.மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.