" "" "

இன்றைய ராசிப்பலன் – 06.08.2020

06-08-2020, ஆடி 22, வியாழக்கிழமை, திரிதியை திதி இரவு 12.15 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் பகல் 11.18 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் பகல் 11.18 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மேஷ ராசி நேயர்களே:

எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார்.

ரிஷப ராசி அன்பர்களே:

எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

மிதுன ராசி காரர்களே:

பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்க வும்.விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.தெய்வ வழிபாடு நல்லது.

கடக ராசி நேயர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும்.உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகலாம். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் பொறுமை மிக அவசியம்.வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:

சிலருக்கு வீட்டில் அதிகரிக்கும் பொறுப்புகளின் காரணமாக உடல் அசதி உண்டாகும் .பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் சக நண்பர்கள் ஒற்றுமையோடு பணிபுரிவர்கள்.

கன்னி ராசி காரர்களே:

சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாராசி உறவுகளே:

பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்படலாம்.வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை. மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும்.பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள்.உத்தியோகத்தில் சக நண்பர்கள் ஒற்றுமையோடு பணிபுரிவர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:

பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள்.உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும்.தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:

தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகர ராசி காரர்களே:

தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பேச்சினால் பிரச்னை வர வாய்ப்பு உள்ளதால் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிடைக்கும்.

கும்ப ராசி உறவுகளே:

திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம், செல்பேசி மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்ப தற்கு வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

மீன ராசி நேயர்களே:

வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சல் உண்டாகும்.உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. நண்பர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.