" "" "

இன்றைய ராசி பலன் 07.06..2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.07-06-2019, வைகாசி 24, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி காலை 07.38 வரை பின்பு பஞ்சமி திதி பின்இரவு 05.17 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூசம் நட்சத்திரம் மாலை 06.56 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷராசி நேயர்களே: நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். சிலருக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரிஷபராசி அன்பர்களே:புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம்.உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும்.வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனராசி காரர்களே:புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும்.மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

கடகராசி நேயர்களே:தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள்.வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

சிம்மராசி அன்பர்களே: திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும்.பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும்.

கன்னி ராசி காரர்களே:உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உண்டு. முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

துலாராசி உறவுகளே: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள்.அரசு பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வி.ஐ.பிகள் உதவுவார்கள்.எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

விருச்சிகராசி நேயர்களே:சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். .மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும்.மனசாட்சி படி செயல்படும் நாள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

தனுசுராசி அன்பர்களே:சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும்.வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது. வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

மகரராசி காரர்களே:. சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற் கொள்ள நேரிடும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

கும்பராசி உறவுகளே: சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.

மீனராசி நேயர்களே:வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது.சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.