இன்றைய ராசி பலன் 08.06..2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.08-06-2019, வைகாசி 25, சனிக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 02.55 வரை பின்பு வளர்பிறை சப்தமி. ஆயில்யம் நட்சத்திரம் மாலை 05.21 வரை பின்பு மகம். மரணயோகம் மாலை 05.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக- நவகிரக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

மேஷராசி நேயர்களே:உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். ஒரு சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபராசி அன்பர்களே: உறவினர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும்.நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருப்பதுடன், ஆதாயம் தருவதாகவும் அமையும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். அரசால் ஆதாயம் உண்டு.

மிதுனராசி காரர்களே:பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கடகராசி நேயர்களே:புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படும்.பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.நெருங்கிய வரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

சிம்மராசி அன்பர்களே:தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள்.திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டி கையெழுத்திட வேண்டாம்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள்.மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.

கன்னி ராசி காரர்களே:உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.வீட்டை அழகுப்படுத்துவீர்கள்.உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

துலாராசி உறவுகளே:எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும்.உடன்பிறந் தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும்.நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்.

விருச்சிகராசி நேயர்களே:நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

தனுசுராசி அன்பர்களே:இன்றும் சந்திராஷ்டமம் தொடர்வதால் குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனக்குழப்பம் அலைச்சல் சோர்வு ஏற்படும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.

மகரராசி காரர்களே:புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. தாயார் ஆதரித்துப் பேசுவார். ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்றி மகிழ்வீர்கள்.மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக்கூடும்.

கும்பராசி உறவுகளே:அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவும் ஏற்படும்.குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.

மீனராசி நேயர்களே:வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங் கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.சையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அவசி யம். வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.