" "" "

இன்றைய ராசி பலன் – 08.11.2020

இன்றைய பஞ்சாங்கம், 08-11-2020, ஐப்பசி 23, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி காலை 07.29 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. பூசம் நட்சத்திரம் காலை 08.45 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கால பைரவர் – நவகிரக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை அவசியம்.வீட்டை விரிவுபடுத்துவது குறித்துயோசிப்பீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.திருமண பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

மிதுன ராசி காரர்களே:

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சகோதரர்களுக்காகச் செலவு செய்ய நேரிடும் என்றாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். தூர பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கடக ராசி நேயர்களே:

கையிருப்பு குறையும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும்.

சிம்ம ராசி அன்பர்களே:

செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

கன்னி ராசி காரர்களே:

உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிகப்படியான செலவும் அலைச்சலும் ஏற்படும்.பூர்வீக சொத்துப் பிரச்சினை ஒன்று தீரும். தந்தைவழி உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பகை விலகி ஒற்றுமை கூடும்.பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும்.

துலாராசி உறவுகளே:

சுபகாரியங்கள் கைகூடும்.கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடவும்.கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

விருச்சிக ராசி நேயர்களே:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கும்.குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு பெருகும்.

தனுசு ராசி அன்பர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பணத்தை செலவு செய்யும்போது தேவையான செலவுதானா என்று யோசித்துச் செய்வது நல்லது.பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகர ராசி காரர்களே:

கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். புது வேலை அமையும்.

கும்ப ராசி உறவுகளே:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

மீன ராசி நேயர்களே:

தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைகண்டறிவீர்கள். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள்.