" "" "

இன்றைய ராசிபலன் – 09.03.2021

இன்றைய பஞ்சாங்கம், 09-03-2021, மாசி 25, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பகல் 03.02 வரை பின்பு தேய்பிறை துவாதசி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 08.41 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 08.41 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ரிஷப ராசி அன்பர்களே:

வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.ஆலோசனை கேட்டு வருவார்கள்.பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

மிதுன ராசி காரர்களே:

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.மற்றவர்களைபற்றிவீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கடக ராசி நேயர்களே:

பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல் படுவார்கள்.அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.உங்க ளால் பயனடைந்தவர் சிலரை இப்போது நீங்கள் சந்திக்க நேரிடும். தந்தையின் உடல்நலனில் கவ னம் தேவை.உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

கன்னி ராசி காரர்களே:

அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். எதிரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும்.

துலாராசி உறவுகளே:

தாய்வழி உறவினர் களால் மனக்கசப்புகள் நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.உத்தியோகஸ்தர்கள் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.வெளியூர் பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டு.

விருச்சிக ராசி நேயர்களே:

குடும்பத் தில் சில விஷயங்களை முன் நின்று செய்வீர்கள். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் வெற்றி பெறுவீர்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே:

குடும்பத் தில் சில விஷயங்களை முன் நின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். தந்தைவழி உறவினர் களால் வீண் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.நட்பு வழியில் நல்ல செய்தியை கேட்பீர்கள்.

மகர ராசி காரர்களே:

தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும்.குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கும்ப ராசி உறவுகளே:

நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும்.உறவினர் நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

மீன ராசி நேயர்களே:

தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.மற்றவர்களு டன் வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவது தாமதமாகும்.உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.