" "" "

இன்றைய ராசி பலன் 09.06..2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.09-06-2019, வைகாசி 26, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 12.36 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மகம் நட்சத்திரம் பிற்பகல் 03.49 வரை பின்பு பூரம். மரணயோகம் பிற்பகல் 03.49 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷராசி நேயர்களே:பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரிஷபராசி அன்பர்களே:தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.புது வேலை அமையும். வியாபாரத் தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். ணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும்.

மிதுனராசி காரர்களே:அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. உறவினர்கள் வழியில் சில பொறுப்புகளை நிறைவேற்றவேண்டி வரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகராசி நேயர்களே:வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வீட்டில் சில மராமத்துப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும். அதன் காரணமாக செலவுகளும் ஏற்படும். லவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்மராசி அன்பர்களே:தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.உடல் நலம் பாதிக்கும். வாகனம் பழுதாகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். நண்பர்களின் எதிர்பாராத சந்திப்பின் காரணமாக உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

கன்னி ராசி காரர்களே:குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். மாலையில் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி அடுத்தடுத்து ஏதேனும் பணிகள் வந்தபடி இருக்கும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள்.குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

துலாராசி உறவுகளே:உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.தாய்வழியில் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

விருச்சிகராசி நேயர்களே:உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும்.

தனுசுராசி அன்பர்களே:சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். நீண்டநாளாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்..பிள்ளைகளால் மன அமைதி குறையும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும்.

மகரராசி காரர்களே:.சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும்.பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

கும்பராசி உறவுகளே:உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.டும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும்.

மீனராசி நேயர்களே:குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.அரசால் அனுகூலம் உண்டு. மனதிற்கு இதமான செய்திகள் வரும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.