" "" "

இன்றைய ராசி பலன் – 10.03.2021

இன்றைய பஞ்சாங்கம், 10-03-2021, மாசி 26 , புதன்கிழமை, துவாதசி திதி பகல் 02.40 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 09.02 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் இரவு 09.02 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

ரிஷப ராசி அன்பர்களே:

நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகலாம்.

மிதுன ராசி காரர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். உடல்நலனில் கவனம் தேவை.கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

கடக ராசி நேயர்களே:

கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும்.சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம்.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கன்னி ராசி காரர்களே:

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும்.

துலாராசி உறவுகளே:

பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும்.தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரம் எதிர்பார்த்த படியே நடக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:

விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே:

நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் இன்று முடியும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.

மகர ராசி காரர்களே:

கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் சில பிரச்னை கள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

கும்ப ராசி உறவுகளே:

நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும்.பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.

மீன ராசி நேயர்களே:

சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார்.பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயம் தருவதாக அமையும்.