" "" "

இன்றைய ராசி பலன் 10.06..2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.10-06-2019, வைகாசி 27, திங்கட்கிழமை, அஷ்டமி திதி இரவு 10.24 வரை பின்பு வளர்பிறை நவமி. பூரம் நட்சத்திரம் பிற்பகல் 02.21 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷராசி நேயர்களே:அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு, தண்ணீர் விஷயத்தில் அலட்சியம் காட்டவேண்டாம்.உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகக்கூடும்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரிஷபராசி அன்பர்களே:உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும்.குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

மிதுனராசி காரர்களே:பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள்.

கடகராசி நேயர்களே:தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.நிதானத்தை கடைப்பிடிப்பதன் மூலம் விரயங்களை தவிர்க்கலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சிம்மராசி அன்பர்களே:வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும்.நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும்.வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

கன்னி ராசி காரர்களே:பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திடீர் பயணங்கள் உண்டு. பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துச் செல்லும்.

துலாராசி உறவுகளே:பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை கூடும்.கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.உடன்பிறந் தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள்.

விருச்சிகராசி நேயர்களே:நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும்.

தனுசுராசி அன்பர்களே: நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. உடல்நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.பணவரவு சுமாராக இருக்கும்.

மகரராசி காரர்களே: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம்.உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்.

கும்பராசி உறவுகளே:புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும்.உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக் கூடும்.பிள்ளைகள் நீண்டநாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும்.சுபகாரியம் கைகூடும். சக பணியாளர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

மீனராசி நேயர்களே:புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.