" "" "

இன்றைய ராசி பலன் – 11.03.2021

இன்றைய பஞ்சாங்கம், 11-03-2021, மாசி 27, வியாழக்கிழமை, திரியோதசி திதி பகல் 02.40 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 09.45 வரை பின்பு சதயம். சித்தயோகம் இரவு 09.45 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மஹா சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும்.உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:

வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.சிலருக்குக் குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.குடும்பம் அல்லது வேலை தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் பெறுவீர்கள்.

மிதுன ராசி காரர்களே:

ராசிக்கு காலை 09.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.சகோதரிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நன்று.

கடக ராசி நேயர்களே:

ராசிக்கு காலை 09.21 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.வீண் பிரச்சினைகள் தேடி வரும். திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:

சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் வெளியிடங்க ளுக்குச் சென்று வருவீர்கள்.புத்திர வழியில் விரயங்கள் ஏற்படலாம். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும்.

கன்னி ராசி காரர்களே:

அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.

துலாராசி உறவுகளே:

தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும்.உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:

சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.அரசால் அனுகூலம் உண்டு.புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே:

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள் வார்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும்.

மகர ராசி காரர்களே:

உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்கவேண்டாம்.சிலருக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.உறவினர் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

கும்ப ராசி உறவுகளே:

உங்களால் பலனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பிள்ளைகளால் வீட்டில் உற்சாகமும் கலகலப்புமான சூழ்நிலை காணப்படும்.பூர்வீக சொத்து விஷயமாக அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும்.

மீன ராசி நேயர்களே:

தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைகளுக்கு ஒன்று தீரும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். யதார்த்தமாக பேசி கவர்வீர்கள்.வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.