" "" "

இன்றைய ராசி பலன் 11.06..2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.11-06-2019, வைகாசி 28, செவ்வாய்க்கிழமை, நவமி திதி இரவு 08.19 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திரம் நட்சத்திரம் பிற்பகல் 01.00 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பிற்பகல் 01.00 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷராசி நேயர்களே:சுபசெலவுகள் ஏற்படும்.வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரிஷபராசி அன்பர்களே:பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும்.குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபடவேண்டி இருக்கும்.புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர் வருகை உற்சாகம் தரும்.வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனராசி காரர்களே:அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. மறைமுக எதிர்ப்பு நீங்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

கடகராசி நேயர்களே:பேச்சில் முதிர்ச்சி தெரியும். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம்.சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

சிம்மராசி அன்பர்களே:பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல்நலனில் கவனம் தேவை.

கன்னி ராசி காரர்களே:கணவன்-மனைவிக் குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தாயின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச் செய்தி கிடைக்கக்கூடும். உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

துலாராசி உறவுகளே:குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும்.யாருக்கும் பணம், நகை வாங்கித்தருவதில் ஈடுபட வேண்டாம். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.கடன்கள் ஒரளவு குறையும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்.வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம்.

விருச்சிகராசி நேயர்களே:பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சூடுபிடிக்கும்.

தனுசுராசி அன்பர்களே:திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும்.மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.

மகரராசி காரர்களே:சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும்.புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.பணவரவு சுமாராக இருக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள்.

கும்பராசி உறவுகளே:சந்திராஷ்டமம் தொடங்குவதால் மன அமைதி குறையும்.தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

மீனராசி நேயர்களே:திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும்.மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.சகோதரங்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.