" "" "

இன்றைய ராசி பலன் – 11-06-2021

இன்றைய பஞ்சாங்கம், 11-06-2021, வைகாசி 28, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி மாலை 06.31 வரை பின்பு வளர்பிறை துதியை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.30 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:வேலையில் பணிச்சுமை குறையும்.தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உத்தியோக ரீதியாக செய்யும் செயல்களில் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷப ராசி அன்பர்களே:வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும்.இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

மிதுன ராசி காரர்களே:திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும்.பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அனு கூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பிற்பகலுக்குமேல் மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே:குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும்.வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:குடும்பத்தில் சந்தோஷம் கூடும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.நெருங்கியவர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஒரளவு குறையும்.

கன்னி ராசி காரர்களே:வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன்-மனைவிக்குள் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

துலாராசி உறவுகளே:சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும்.வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம்

விருச்சிக ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் மன அமைதி குறையும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். சிலர் வீட்டிலேயே இறைவழிபாட்டில் ஈடுபடுவார்கள்.வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம்.

தனுசு ராசி அன்பர்களே:நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.மறைமுக எதிர்ப்பு நீங்கும்.பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும்.பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

மகர ராசி காரர்களே:எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது.வாழ்க்கைத்துணை நீண்டநாள் களாக கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள்.சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கும்ப ராசி உறவுகளே:பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.மனைவி வழி உறவினர்களால் நற்பலன் ஏற்படும். சிலருக்கு இளைய சகோதரரால் சங்கடங்கள் ஏற்படும்.பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும்.வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மீன ராசி நேயர்களே:

மனைவி வழி உறவினர்களால் நற்பலன் ஏற்படும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் தாமதமாக கிடைக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சியும் உற்சாகமும் தருவதாக இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும்.