" "" "

இன்றைய ராசி பலன் – 11.08.2020

இன்றைய பஞ்சாங்கம், 11-08-2020, ஆடி 27, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி காலை 09.07 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. பரணி நட்சத்திரம் இரவு 12.57 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கோகுலாஷ்டமி. கால பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மேஷ ராசி நேயர்களே:

யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.தையோ இழந்ததை போல் ஒருவித கவலைகள் வந்து போகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.வேற்று மொழி நபர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.

ரிஷப ராசி அன்பர்களே:

உறவினர்களுடன் மனஸ் தாபங்கள் வந்து நீங்கும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.அலுவலகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும்.வியாபாரத்தில் லாபம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

மிதுன ராசி காரர்களே:

உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள்.

கடக ராசி நேயர்களே:

சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும்.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். தொழில் ரீதியான வழக்குகளில் சாதகப் பலன் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:

குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை தரும். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்..கைமாற் றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

கன்னி ராசி காரர்களே:

சிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். செய்யும் செயல்களில் தாமதப்பலனே கிடைக்கும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.எந்த விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. எந்த விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும்.

துலாராசி உறவுகளே:

பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.ல்யாண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே:

பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:

திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள்.

மகர ராசி காரர்களே:

வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும்.உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறு பாடுகள் வந்து நீங்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதர வாக இருப்பார். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.

கும்ப ராசி உறவுகளே:

உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படுவார்கள்.பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

மீன ராசி நேயர்களே:

வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.