" "" "

இன்றைய ராசி பலன் – 12.01.2021

இன்றைய பஞ்சாங்கம், 12-01-2021, மார்கழி 28, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.23 வரை பின்பு அமாவாசை. மூலம் நட்சத்திரம் காலை 07.37 வரை பின்பு பூராடம் நட்சத்திரம் பின்இரவு 06.21 வரை பின்பு உத்திராடம். அமிர்தயோகம் காலை 07.37 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 06.21 வரை பின்பு பிரபலாரிஷ்டயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சர்வ அமாவாசை. ஸ்ரீ அனுமந்த ஜெயந்தி.இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும்.தெய்வப் பணிகளில் ஈடு படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.உறவினர் நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருக் கவும்.

மிதுன ராசி காரர்களே:

விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும்.

கடக ராசி நேயர்களே:

திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும்.சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.உறவினர்கள் நண்பர்கள் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். சிலருக்கு எதிர் பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:

புது நட்பால் உற்சாகமடைவீர்கள்.தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும்.சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவுமிருக்காது.உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

கன்னி ராசி காரர்களே:

உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுசரித்துச் செல்வது நல்லது.பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.வாகன வசதி பெருகும்.

துலாராசி உறவுகளே:

குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும்.பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:

வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதி கரிக்கும்.கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.

தனுசு ராசி அன்பர்களே:

சுபகாரியங்கள் கைகூடும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும்.பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள்.

மகர ராசி காரர்களே:

உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள், உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைத்து மகிழ்ச்சி தரும். தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

கும்ப ராசி உறவுகளே:

பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் தேவை.குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மீன ராசி நேயர்களே:

திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும்.வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும்.வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். மற்ற வர்களுடன் இணக்கமான அணுகுமுறை அவசியம்.