" "" "

இன்றைய ராசி பலன் 12.06..2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.12-06-2019, வைகாசி 29, புதன்கிழமை, தசமி திதி மாலை 06.27 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 11.51 வரை பின்பு சித்திரை. மரணயோகம் பகல் 11.51 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷராசி நேயர்களே: பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.பிள்ளைகளால் பெருமை சேரும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரிஷபராசி அன்பர்களே: பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோ கம் குறித்து யோசிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

மிதுனராசி காரர்களே:சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும்.வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.தொழிலில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாதபடி பணிச்சுமை அதிகரிக்கும்.புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகராசி நேயர்களே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.விருந் தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

சிம்மராசி அன்பர்களே:எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உங்கள் குடும்பத்தினரை பற்றி வெளி நபர்களிடம் குறைக் கூறி பேச வேண்டாம். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும்.உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி ராசி காரர்களே:சுபகாரிய முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும்.கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். பொறுமையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலாராசி உறவுகளே:உடல்நலனில் கவனம் தேவை.தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது.

விருச்சிகராசி நேயர்களே:பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.எங்குச் சென்றா லும் நல்ல வரவேற்பு கிட்டும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.புதிய முயற்சிகள் வெற்றியை தரும். இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

தனுசுராசி அன்பர்களே: சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

மகரராசி காரர்களே:சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும்.எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர் கள். பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

கும்பராசி உறவுகளே:சந்திராஷ்டமம் நீடிப்பதால் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறு சலசலப்பு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

மீனராசி நேயர்களே: தாயார் ஆதரித்துப் பேசுவார். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடி யும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும்.சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும்.