" "" "

இன்றைய ராசி பலன் – 12.07.2020

இன்றைய பஞ்சாங்கம், 12-07-2020, ஆனி 28, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி பகல் 03.48 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 08.18 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்த யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மேஷ ராசி நேயர்களே:

காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போராடிலாபம் ஈட்டுவீர்கள்

ரிஷப ராசி அன்பர்களே:

உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

மிதுன ராசி காரர்களே:

சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழிலிவியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். மாலையில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

கடக ராசி நேயர்களே:

சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகளை நிகழ்த்தும் வாய்ப்பு ஏற்படும்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும். பிற்பகலுக்குமேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கக்கூடும்.உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடைய முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே:

சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும்.பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும், வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும்.தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிற்பகலுக்கு மேல் வீண்செலவுகள் மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தும்.

கன்னி ராசி காரர்களே:

தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும்.பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

துலாராசி உறவுகளே:

வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும்.தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள்.கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்

விருச்சிக ராசி நேயர்களே:

உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும்.திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். எதிர்பாராத வகையில் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

தனுசு ராசி அன்பர்களே:

வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வெளிப் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

மகர ராசி காரர்களே:

உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும்.வியாபார ரீதியாக உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலை விஷயமாக செல்லும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

கும்ப ராசி உறவுகளே:

எதிரிகளால் பிரச்னை ஏற்படும் என்பதால், கவனமாக இருக்கவும்.தொழிலில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.

மீன ராசி நேயர்களே:

தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். உறவினர்கள் வகையில் வீண்மனஸ்தாபம் ஏற்படும்.வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். புதிய முயற்சியைத் தவிர்ப்பது