" "" "

இன்றைய ராசி பலன் – 12.08.2020

இன்றைய பஞ்சாங்கம்,12-08-2020, ஆடி 28, புதன்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.17 வரை பின்பு தேய்பிறை நவமி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 03.26 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் பின்இரவு 03.26 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஆடி கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மேஷ ராசி நேயர்களே:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ணப் புழக்கம் கணிசமாக உயரும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்..வேலையில் ஈடுபாடு சற்று குறைந்து காணப்படும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

ரிஷப ராசி அன்பர்களே:

உறவினர் நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். செலவுகள் அதிகரித்தாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள்.ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் குறையும். அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும்.

மிதுன ராசி காரர்களே:

உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிட்டும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.நெருங்கியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.

கடக ராசி நேயர்களே:

காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் விலகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை வீட்டிலேயே நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

கன்னி ராசி காரர்களே:

வீட்டில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவது

துலாராசி உறவுகளே:

சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும்.. உங்களின் அணுகுமுறையை மாற்றி கொள்வது நல்லது. மற்றவர்கள் மீது கோபப்படும் நிலை உருவாகும் எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபடவேண்டி இருக்கும். பணியில் கவனம் தேவை.

விருச்சிக ராசி நேயர்களே:

அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு நிம்மதியை தரும். பழைய பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். மறைமுக எதிர்ப்பு நீங்கும்.உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:

பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

மகர ராசி காரர்களே:

உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.. அக்கம்-பக்கம் வீட்டாரின் உதவி கிடைக்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். . பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். பொறுமையாக இருப்பது அவசியம்.

கும்ப ராசி உறவுகளே:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாயின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள்.

மீன ராசி நேயர்களே:

உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும்.