" "" "

இன்றைய ராசி பலன் 13.06..2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

மேஷராசி நேயர்களே:கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். தந்தைவழியில் சில செலவுகள் ஏற்படக்கூடும்.உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரிஷபராசி அன்பர்களே:உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும்.பிள்ளைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும் உண்டு.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.சகோதர சகோதரி வழியில் நன்மைகள் உண்டாகும்.

மிதுனராசி காரர்களே:சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சிலருக்கு மகான்களை தரிசிக்கவும் அவர்களுடைய ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படும்.வியாபாரத்தில் புது வேலையாட்களை சேர்ப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

கடகராசி நேயர்களே: தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்டநாள்களாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்திருந்த தெய்வப் பிரார்த்தனைகளை இன்று நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும்.நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.

சிம்மராசி அன்பர்களே:. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தந்தைவழியில் சில செலவுகள் ஏற்படக்கூடும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். ஆனாலும், பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும்.

கன்னி ராசி காரர்களே:சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.உங்களுக்கு இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

துலாராசி உறவுகளே:பண விஷயத்தில் கறாராக இருங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும்.வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும்.

விருச்சிகராசி நேயர்களே:உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உறவினர்கள் வருகையால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. அரசு காரியங்கள் இழுபறியாகும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். செலவுகளை சமாளிக்க முடியும்.

தனுசுராசி அன்பர்களே: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை.பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். அலுவலகம் தொடர்பான வெளியூர்ப் பயணம் ஆதாயம் தருவதாக இருக்கும்.

மகரராசி காரர்களே:பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

கும்பராசி உறவுகளே:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

மீனராசி நேயர்களே: சந்திராஷ்டமம் தொடங்குவதால் உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும்.யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்..