" "" "

இன்றைய ராசி பலன் – 13.07.2021

இன்றைய பஞ்சாங்கம், 13-07-2021, ஆனி 29, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி காலை 08.24 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. மகம் நட்சத்திரம் பின்இரவு 03.41 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது.இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. எதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும்.நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும்.

ரிஷப ராசி அன்பர்களே:வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.இளைய சகோதரர்கள் மூலம் சில சங்கடங் கள் ஏற்படக்கூடும்.உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.பால்ய நண்பர்கள் உதவுவார்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மிதுன ராசி காரர்களே: சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிப்பீர்கள்.குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பழைய பிரச்னைகளில் ஒன்று தீரும். தேவையான அளவுக்கு பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.செய்யும் வேலைகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள்.

கடக ராசி நேயர்களே:அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். குடும்பம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் குடும்பப் பெரியவரின் அறிவுரையைக் கேட்டு நடப் பது நல்லது.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினை ஒரளவு குறையும்.

சிம்ம ராசி அன்பர்களே:இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும்.ருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை யும் ஏற்படும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும்.

கன்னி ராசி காரர்களே: யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று காலதாமதமாகும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் பணியாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.

துலாராசி உறவுகளே:பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாகும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும்.திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:எதிர்பாராத சந்திப்பு நிகழும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

தனுசு ராசி அன்பர்களே:பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் விருப்பப் படி நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

மகர ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். உறவினர்கள் தலையீடு காரணமாகக் குடும்பத் தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கும்ப ராசி உறவுகளே:தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டாகும்.உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகள் சாதகமாகும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்.உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். அதிகாரிகளின் ஆதரவால் எதிர் பார்த்த சலுகை கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும்.உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை செய்து கொடுப்பீர்கள். புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது. பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.