" "" "

இன்றைய ராசி பலன் – 14.01.2021

இன்றைய பஞ்சாங்கம்,14-01-2021, தை 01, வியாழக்கிழமை, பிரதமை திதி காலை 09.02 வரை பின்பு வளர்பிறை துதியை. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 05.04 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். உத்தராயண புண்யகாலம் ஆரம்பம். பொங்கல் பண்டிகை. கரி நாள். பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 9.00 முதல் 11.00 வரை மதியம் 01.00 முதல் 01.30 வரை.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது.உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசெய்தி வரும். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.குடும்பத்தில் மற்ற வர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பணப்புழக்கம் கணிசமாக உயரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

மிதுன ராசி காரர்களே:

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும்.யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் புலம்புவீர்கள். வெளியில் செல்லும்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம்.

கடக ராசி நேயர்களே:

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள்.எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.பாதியில் நின்ற வேலைகள் அனைத்தும் இனிதே முடியும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

அரசால் அனுகூலம் உண்டு.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பும்.எதிரிகளின் சூழ்ச்சிகளை எளிதில் முறியடிப்பீர்கள்.பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி காரர்களே:

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.அதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள்.

துலாராசி உறவுகளே:

நண்பர்களின் உதவி கிட்டும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.தாயாருக்கு கருத்து மோதல்கள் வந்து செல்லும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.பழைய சரக்குகள் விற்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிக ராசி நேயர்களே:

அரசால் ஆதாயம் உண்டு.உறவினர்களால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு ராசி அன்பர்களே:

புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். டென்ஷன் கோபம் நீங்கும்.வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும்.

மகர ராசி காரர்களே:

சுபகாரியங்கள் கைகூடும்.பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கி தவிப்பீர்கள்.வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உத்தியோகத்தில் உங்களை உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

கும்ப ராசி உறவுகளே:

மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

மீன ராசி நேயர்களே:

பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள்.தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சகோதரர் கேட்கும் உதவி யை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக் கும் வாய்ப்பு உண்டு.