" "" "

இன்றைய ராசி பலன் – 14.02.2021

இன்றைய பஞ்சாங்கம், 14-02-2021, மாசி 02, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி பின்இரவு 01.59 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 04.32 வரை பின்பு உத்திரட்டாதி. சித்தயோகம் மாலை 04.32 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

உறவினர்களால் சங்கடங்கள் வரும்.மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். உற்சாகமும் பெருக்கெடுக்கும்.கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.

ரிஷப ராசி அன்பர்களே:

பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். சிலருக்கு பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மிதுன ராசி காரர்களே:

பிரியமானவர்க ளுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும்.புது பொருள் வந்து சேரும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள்.

கடக ராசி நேயர்களே:

ராசிக்கு பகல் 10.09 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். லேசாக தலை வலிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. தாய்மாமன் வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும்.மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே:

ராசிக்கு பகல் 10.09 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வீண் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.பிற்பகலுக்குமேல் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சின்ன சின்ன கவலைகள் வந்து போகும்.

கன்னி ராசி காரர்களே:

சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.குடும்பத்தில் சந்தோஷத்தில் குறைவு இல்லாமல் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாராசி உறவுகளே:

சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள் கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சிலமுக்கியமுடிவுகள் எடுப்பார்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.

விருச்சிக ராசி நேயர்களே:

அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சிலமுக்கியமுடிவுகள் எடுப்பார்கள்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.அயராத உழைப்பால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:

சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.வீட்டுப் பராமரிப்புப்பணி களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும்.தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும்.இல்லத்தில் இனிய செய்திகள் வந்து சேரும்.

மகர ராசி காரர்களே:

சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்-கு வந்து சேரும்.வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினைகள் தீரும்.

கும்ப ராசி உறவுகளே:

அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும்.பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.கணவன் மனைவிக்குள் அன்னியோன்னியம் பிறக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.தொழில் வளர்ச்சிக்காக எதிர்ப்பார்த்த உதவி கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.எதிர்ப்புகள் அடங்கும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும்.பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.