" "" "

இன்றைய ராசி பலன் 14.06..2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

மேஷராசி நேயர்களே: வாழ்க்கைத்துணை மூலம் பொருள்வரவு சேரும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகை சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும், பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரிஷபராசி அன்பர்களே:குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிட்டும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.ண்பர் களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள் வார்கள்.

மிதுனராசி காரர்களே:சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும்,

கடகராசி நேயர்களே:தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும்.அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் சாதகமான பலன் உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மராசி அன்பர்களே:பிரபலங்களின் தொடர்பு கிட்டும்.நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

கன்னி ராசி காரர்களே:எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமத நிலை ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும்.

துலாராசி உறவுகளே:குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். மாலையில் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும்.

விருச்சிகராசி நேயர்களே:. உறவினர்களுடன் மனத் தாங்கல் வரும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.சுபகாரிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும்.

தனுசுராசி அன்பர்களே:தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.புத்திர வழியில் மன மகிழ்ச்சி கூடும்.சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை எதிர்பாராத வகையில் கிடைக்கும்.வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள்.

மகரராசி காரர்களே:உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு ஏற்படும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி, தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள்.

கும்பராசி உறவுகளே: மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.தேவையற்ற பயணங்களால் அலைச்சல் சோர்வு ஏற்படும்.தந்தையுடன் வீண் வாக்கு வாதம் செய்வதைத் தவிர்க்கவும்.. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உறவினர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை அவசியம்.

மீனராசி நேயர்களே:சந்திராஷ்டமம் நீடிப்பதால் இன்று எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். மற்றவர்களுடன் விவாதம் செய்ய நேரிட்டால் விலகிச் செல்வது நல்லது. ரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.