" "" "

இன்றைய ராசிப்பலன் – 14.07.2021

இன்றைய பஞ்சாங்கம், 14-07-2021, ஆனி 30, புதன்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.03 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூரம் நட்சத்திரம் பின்இரவு 03.42 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும்.சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ள தால் பொறுமை அவசியம்.

ரிஷப ராசி அன்பர்களே:தந்தையுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும்.உத்தியோகத்தில் வேலைபளு குறையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள்.

மிதுன ராசி காரர்களே:சொந்த பந்தங்கள் மதிப்பார்கள்.அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே:நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு.இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தையின் தேவையை நிறைவேற்றும் வகையில் சிறிது அலைச்சல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.உறவினர்களால் நன்மை உண்டு. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி ராசி காரர்களே:பெற்றோரின் ஆதரவு நம்பிக்கையை அளிக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக் குகள் நீங்கும்.குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சாதுர்யமாகச் சமாளித்துவிடுவீர்கள்.கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.

துலாராசி உறவுகளே:சுப முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எதிரிகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும்.

விருச்சிக ராசி நேயர்களே:வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்த னைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வீண் அலைச்சலை கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும்.இல்லத்தில் தாராள தனவரவு உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.உறவினர்களால் குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாகும்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையே காணப்படும்.பொருளாதார பிரச்சினைகளால் மனஅமைதி குறையலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

மகர ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் சில ருக்கு ஏற்படும்.சுப முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள்.

கும்ப ராசி உறவுகளே:வேற்று மதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வும்.பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.பழைய கடன் பிரச்சினைகள் தீரும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

மீன ராசி நேயர்களே:

சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்.தந்தையிடம் எதிர் பார்த்த பணஉதவி கிடைக்கும்.உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு நண் பர்கள் மூலம் பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.