" "" "

இன்றைய ராசி பலன் – 14.09.2020

இன்றைய பஞ்சாங்கம், 14-09-2020, ஆவணி 29, திங்கட்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.30 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூசம் நட்சத்திரம் பகல் 03.52 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மேஷ ராசி நேயர்களே:

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறையும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை அவசியம்.வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.

ரிஷப ராசி அன்பர்களே:

உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நண்பர்களின் உதவியால் பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். அரசு துறை சார்ந்தவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். பிற்பகலுக்குமேல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

மிதுன ராசி காரர்களே:

யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சகோதரர்களுக்காகச் செலவு செய்ய நேரிடும் என்றாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். ண் செலவுகள் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடக ராசி நேயர்களே:

குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை.நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

சிம்ம ராசி அன்பர்களே:

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். தாயாருடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் ஏற்படும்

கன்னி ராசி காரர்களே:

சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். தந்தைவழி உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.அரைகுறையாக நின்ற வேலைகள் அனைத்தும் எளிதில் முடியும்.

துலாராசி உறவுகளே:

வேலையில் வீண் அலைச்சல் உண்டாகும். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடவும்.சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறைந்து மன அமைதி ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே:

உடன் பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கும்.தடைபட்ட வேலைகள் அனைத்தையும் முடிப்பீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும் ,எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும்.செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். பணத்தை செலவு செய்யும்போது தேவையான செலவுதானா என்று யோசித்துச் செய்வது நல்லது.அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம்.

மகர ராசி காரர்களே:

பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

கும்ப ராசி உறவுகளே:

றவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.பண வரவு திருப்தி தரும். உறவினர்கள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்.