இன்றைய ராசி பலன் – 15.01.2021
இன்றைய பஞ்சாங்கம், 15-01-2021, தை 02, வெள்ளிக்கிழமை, துதியை திதி காலை 08.05 வரை பின்பு வளர்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 05.16 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாட்டுப் பொங்கல். திருவள்ளுவர் தினம். கரி நாள். கோ பூஜை செய்ய உகந்த நேரம் காலை 6.00 முதல் 8.00 வரை, காலை 10.00 முதல் 10.30 வரை.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்க்கும் விஷயங்களைவிட எதிர்பாராத விஷயங்கள் திடீரென்று கூடிவரும். அருகில் இருக்கும் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:
குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.சகோதர உறவுகள் கை கொடுத்து உதவுவார்கள். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும்.கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். கல்வி வகையில் செலவுகள் இருக்கும்.
மிதுன ராசி காரர்களே:
ராசிக்கு மாலை 05.05 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. கண், தொண்டை சம்பந்தமாக உபாதைகள், மருத்துவச் சிகிச்சைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் குறைவாகவே கிடைக்கும். அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.
கடக ராசி நேயர்களே:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து வேலையில் சேர அழைப்பு வரும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.ராசிக்கு மாலை 05.05 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.
சிம்ம ராசி அன்பர்களே:
பெண்களுக்கு தோழிகளால் சில பிரச்னைகள் வரலாம். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை.
கன்னி ராசி காரர்களே:
திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.இழுபறியாக இருந்த வழக்கில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள்.
துலாராசி உறவுகளே:
பயணத் திட்டங்களில் தடைகள், மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும்.அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி, பொறுப்பு கிடைக்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிக ராசி நேயர்களே:
சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாகக் கூடி வரும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும்.உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.உத்யோக வகையில் திடீர் வெளியூர் மாற்றம் இருக்கும்.எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
தனுசு ராசி அன்பர்களே:
எதிலும் நிதானமாகவும் சிக்கனமாகவும் செயல்படுவது நல்லது.உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும். பண வரவுகள் முன் பின் இருந்தாலும் பாதிப்பு இருக்காது.எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.
மகர ராசி காரர்களே:
உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். தாய்வழி உறவுகளுக்காகச் செலவு செய்யவேண்டி இருக்கும்.இடம் மாறுவது சம்பந்தமான குழப்பங்கள் முடிவுக்கு வரும். கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது. கைமாற்றாக கொடுத்த பணம் வசூலாகும்.
கும்ப ராசி உறவுகளே:
பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.அலைச்சல், பயணங்கள் இருக்கும். சிலருக்கு திடீர் பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு.உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வெளிநாட்டில் வேலை தேடியவர்களுக்கு நல்ல வேலை அமையும்.
மீன ராசி நேயர்களே:
வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். விட்டு கொடுத்து சென்றால் பண பிரச்சினைகள் குறையும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். தாய் வழி உறவுகளால் செலவுகள் இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.