" "" "

இன்றைய ராசி பலன் – 15.02.2021

இன்றைய பஞ்சாங்கம், 15-02-2021, மாசி 03, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 03.37 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 06.28 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.பணவரவுகளில் இடையூறுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.

ரிஷப ராசி அன்பர்களே:

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.கடன் பிரச்சினைகள் குறையும். முயற்சிகள் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

மிதுன ராசி காரர்களே:

விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.தேவையான அளவுக்குப் பணம் இருப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கடக ராசி நேயர்களே:

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக் கும்.சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.எளிதில் முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.

கன்னி ராசி காரர்களே:

கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும்.பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.

துலாராசி உறவுகளே:

பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

விருச்சிக ராசி நேயர்களே:

அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும்.குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும்.வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே:

தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தந்தைவழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள்.தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகர ராசி காரர்களே:

விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். இளைய சகோதரர் களுக்காக செலவு செய்ய நேரிடும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

கும்ப ராசி உறவுகளே:

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் அனுசரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.

மீன ராசி நேயர்களே:

அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவது தாமதமாகும்.குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். மற்றவர்களு டன் வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம். கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள்.