" "" "

இன்றைய ராசி பலன் – 15.07.2021

இன்றைய பஞ்சாங்கம், 15-07-2021, ஆனி 31, வியாழக்கிழமை, பஞ்சமி திதி காலை 07.16 வரை பின்பு சஷ்டி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 03.21 வரை பின்பு அஸ்தம். மரணயோகம் பின்இரவு 03.21 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். ஆனித் திருமஞ்சனம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே: காணாமல்போன முக்கிய ஆவணம் கிடைக்கும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.

மிதுன ராசி காரர்களே:உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள் வதில் அலட்சியம் வேண்டாம்.உற்றார் உறவினர்களால் நெருக்கடிகள் ஏற்படலாம்.உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள்.

கடக ராசி நேயர்களே:திடீர் பணவரவுகள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும்.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள்.பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பாதியில் நின்ற வேலைகள் முடியும்.

கன்னி ராசி காரர்களே:சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.. உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.

துலாராசி உறவுகளே: செலவுகளை குறைக்கப்பாருங்கள். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்களுக் குக் கொடுத்து வராமல் இருந்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.திடீர் பயணங்கள் இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் உண்டாகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். இழுபறியாக இருந்த அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும்.பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

தனுசு ராசி அன்பர்களே:சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் குறையும்.மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

மகர ராசி காரர்களே: ராசிக்கு காலை 09.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தந்தைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம்.சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப் படுத்தும்.

கும்ப ராசி உறவுகளே:ராசிக்கு காலை 09.40 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும்.பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். செலவுகளை குறைக்கப்பாருங்கள்.வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.

மீன ராசி நேயர்களே:

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.திடீர் பயணங்கள் இருக்கும்.நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சுப முயற்சிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும்.