" "" "

இன்றைய ராசிப்பலன் – 15.09.2020

இன்றைய பஞ்சாங்கம், 15-09-2020, ஆவணி 30, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி இரவு 11.00 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 02.25 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. பிரதோஷம். முருக- நவ கிரக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மேஷ ராசி நேயர்களே:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் புது தொடர்பு ஏற்படும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.

ரிஷப ராசி அன்பர்களே:

விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். இளைய சகோதரர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள்.சொத்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும்.

மிதுன ராசி காரர்களே:

சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். குடும்பம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் குடும்பப் பெரியவரின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது.குடும்ப தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். உடல்நலத்தில் கவனம் தேவை. உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும்.

கடக ராசி நேயர்களே:

நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தேவையான அளவுக்கு பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

சிம்ம ராசி அன்பர்களே:

கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள்.சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கன்னி ராசி காரர்களே:

பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.உடன் பிறந்தவர்கள் உங்களிடம் முக்கியவிஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள்.

துலாராசி உறவுகளே:

சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:

தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வண்டி, வாகன பராமரிப்பிற்காக செலவுகள் செய்ய நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

தனுசு ராசி அன்பர்களே:

02.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். உறவினர்கள் தலையீடு காரணமாகக் குடும்பத் தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும்.தேக்க நிலையை எதிர் கொள்ள நேரிடும்.

மகர ராசி காரர்களே:

வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். பிள்ளைகள் உங்கள் விருப்பப் படி நடந்துகொள்வார்கள்.நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.பிற்பகல் 2.25 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் குடும்பத்தில் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கும்ப ராசி உறவுகளே:

நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சிகள் சாதகமாகும். வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீன ராசி நேயர்களே:

திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.. பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.