" "" "

இன்றைய ராசி பலன் – 16.02.2021

இன்றைய பஞ்சாங்கம்,16-02-2021, மாசி 04, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 05.46 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. ரேவதி நட்சத்திரம் இரவு 08.56 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. வஸந்த பஞ்சமி. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள்.மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளின் காரணமாக கையிருப்பு குறைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும்.எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே:

பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் அமைதி இருக்கும்.சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.

மிதுன ராசி காரர்களே:

நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மாலையில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.கடன்கள் குறையும்.

கடக ராசி நேயர்களே:

பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும்.உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் வீண்செலவுகள் மனசஞ்சலத்தை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக் கூடும்.உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வாழ்க்கைத்துணையால் பிரச்னைகள் ஏற்படும்.ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம்.எதிர்பார்க்கும் காரியங்கள் இழுபறியாகி முடியும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி காரர்களே:

மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தொலை தூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கணவன் – மனை விக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

துலாராசி உறவுகளே:

சுபகாரியங்கள் கைகூடும். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும்.நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர் கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:

பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும்.பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.

தனுசு ராசி அன்பர்களே:

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அசைய சொத்துகளில் உள்ள பிரச்சினை தீரும்.எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும்.

மகர ராசி காரர்களே:

எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் சற்று தாமதம் உண்டாகும்.தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

கும்ப ராசி உறவுகளே:

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.எதிரிகளால் பிரச்னை ஏற்படும் கவனமாக இருக்கவும். நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

மீன ராசி நேயர்களே:

வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். உறவினர்கள் வகையில் வீண்மனஸ்தாபம் ஏற்படும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவை யான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்து விடுவீர்கள்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.