" "" "

இன்றைய ராசி பலன் – 16.09.2020

இன்றைய பஞ்சாங்கம்,16-09-2020, ஆவணி 31, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.57 வரை பின்பு அமாவாசை. மகம் நட்சத்திரம் பகல் 12.20 வரை பின்பு பூரம். சித்தயோகம் பகல் 12.20 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. போதாயன அமாவாசை, இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மேஷ ராசி நேயர்களே:

வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ள தால் பொறுமை அவசியம். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதால் தெய்வ அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உதவிகள் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். சிலருக்கு உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும்.

மிதுன ராசி காரர்களே:

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே:

கடந்த இரண்டு நாட்களாக இருந்த டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றும் வகையில் சிறிது அலைச்சல் ஏற்படக்கூடும். கடன்கள் ஓரளவு குறையும்.

சிம்ம ராசி அன்பர்களே:

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.கணவன் மனைவிக்குள் விட்டுகொடுத்து போவது நல்லது. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள்.

கன்னி ராசி காரர்களே:

எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சாதுர்யமாகச் சமாளித்துவிடுவீர்கள்.எளிதில் முடியக்கூடிய வேலைகள் கூட தாமதமாக முடியும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.

துலாராசி உறவுகளே:

பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். எதிரிகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும்.

விருச்சிக ராசி நேயர்களே:

பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே:

நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையே காணப்படும். நெருங்கியவர்களுக்காக சிலரின் உதவியை நாடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் நிம்மதி நிலவ உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகர ராசி காரர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் சிலருக்கு ஏற்படும்.சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் வரும்.

கும்ப ராசி உறவுகளே:

திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும்.சகோதர வகையில் பயனடைவீர்கள். நண்பர்களால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.

மீன ராசி நேயர்களே:

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. சகோதரர்களுக்காகச் செலவு செய்யவேண்டி வரும்.அலுவலகத்தில் இனிய நிகழச்சிகள் நடைபெறும். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள்.