" "" "

இன்றைய ராசி பலன் – 17.02.2021

இன்றைய பஞ்சாங்கம், 17-02-2021, மாசி 05, புதன்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை சஷ்டி திதி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 11.48 வரை பின்பு பரணி. மரணயோகம் இரவு 11.48 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சிலர் உங்களை பற்றி அவதூறாகப் பேசுவார்கள் அதை பெரிதுபடுத்த வேண்டாம். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும்.ழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.அரசாங்க விஷயம் தாமதமாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.வாகனத்தை இயக்கும் போதுஅலைப்பேசியில் பேச வேண்டாம். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி காரர்களே:

திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு.சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பணிகளை குடும்பத்தினர் பகிர்ந்துகொள்வார்கள்.பிரபலங்களால் ஆதாயம் உண்டு.

கடக ராசி நேயர்களே:

சுபகாரியங்கள் கைகூடும்.வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும்.ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். சிலருக்குக் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை.முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.மன உளைச்சல் நீங்கித் தெளிவு பிறக்கும்.

கன்னி ராசி காரர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் ஏற்படக்கூடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும்.உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும்.வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும்.

துலாராசி உறவுகளே:

கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உறவினர்களால் சங்கடங்கள் உண்டாகும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் பேசும்போது பொறுமை அவசியம். மனைவி வழியில் ஆதரவு பெருகும்.

விருச்சிக ராசி நேயர்களே:

எதிரிகளின் தொல்லைகள் குறையும்.பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும்.சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.சகோதர வகையில் நன்மை உண்டு. குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம். உறவினர் நண்பர்களால் ஆதாய முண்டு.

தனுசு ராசி அன்பர்களே:

சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள்.உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார்.வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.

மகர ராசி காரர்களே:

வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படக்கூடும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.

கும்ப ராசி உறவுகளே:

பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

மீன ராசி நேயர்களே:

ஆடம்பரச் செலவுகளைக்குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண் டாகும்.சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும்.மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.