" "" "

இன்றைய ராசி பலன் – 17.07.2021

இன்றைய பஞ்சாங்கம், 17-07-2021, ஆடி 01, சனிக்கிழமை, அஷ்டமி திதி இரவு 02.41 வரை பின்பு வளர்பிறை நவமி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 01.32 வரை பின்பு சுவாதி. மரணயோகம் பின்இரவு 01.32 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள்.பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வரு கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். புதிய முயற்சி சாதகமாக முடியும்.நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:வாழ்க்கைத்துணையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப் பார்கள்.ர்வீக சொத்துக்கள் வழியாக அனுகூலப்பலன் கிட்டும். விட்டுப்பிடித்துச் செல்லவும்.சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகள் ஏற்கப்படும்.

மிதுன ராசி காரர்களே:. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன் உண்டாகும்.வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கடக ராசி நேயர்களே:எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.வீண் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி ராசி காரர்களே: உற்றார் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சொந்தபந்தங்கள் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

துலாராசி உறவுகளே:விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தில் மூன்றாவது நபர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும். உற்றார் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.முக்கிய முடிவு எடுப்பதில் அவசரம் வேண்டாம்.கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும்.

விருச்சிக ராசி நேயர்களே:பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். சிலருக்கு குடும்பத்துடன் தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். செலவு கள் அதிகரித்தாலும் அதற்கேற்ற பணவரவும் இருப்பதால் பிரச்னை இருக்காது. நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

தனுசு ராசி அன்பர்களே:கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். இளைய சகோதரர்கள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள் வார்கள்.உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களுடைய எதிர் பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகர ராசி காரர்களே:உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் சுபச் செலவாக இருப்பதால் மகிழ்ச்சியே உண்டாகும்.வண்டி வாகனங்கள் பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரிகள் கண்டிப்பாக நடந்து கொள்வார்கள்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கும்ப ராசி உறவுகளே: உங்கள் ராசிக்கு பகல் 2.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.குடும்பத்தில் பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் சுபச் செலவாக இருப்பதால் மகிழ்ச்சியே உண்டாகும். செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது.

மீன ராசி நேயர்களே:

ராசிக்கு பகல் 2.07 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தந்தைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் இழுபறியானாலும் முடிந்துவிடும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்.சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசுவது உற்சாகம் தரும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும்.