" "" "

இன்றைய ராசி பலன் – 17.09.2020

இன்றைய பஞ்சாங்கம், 17-09-2020, புரட்டாசி 01, வியாழக்கிழமை, அமாவாசை திதி மாலை 04.30 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பூரம் நட்சத்திரம் காலை 09.48 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் காலை 09.48 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. மஹாளய அமாவாசை. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மேஷ ராசி நேயர்களே:

மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உடல் உபாதைகள் ஏற்படும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம்.ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். ஒரு சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.பயணங்களால் ஆதாயம் உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே:

உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.

மிதுன ராசி காரர்களே:

சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும்.சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும்.முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.திய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

கடக ராசி நேயர்களே:

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு.உடல் நிலையில் கவனம் தேவை.

கன்னி ராசி காரர்களே:

சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

துலாராசி உறவுகளே:

வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும்.புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மற்றவர்களுக்குக் கொடுத்து வராமல் இருந்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும். சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:

மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. இழுபறியாக இருந்த அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும்.கவனத்துடனும், சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே:

நீண்டநாள் பிரச்னைகளை தீர்க்க எளிய வழியை கண்டறிவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மகர ராசி காரர்களே:

பகல் 03.07 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தந்தைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப் படுத்தும்.கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது.

கும்ப ராசி உறவுகளே:

ராசிக்கு பகல் 03.07 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால்செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம்.அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை குறைக்கலாம்.

மீன ராசி நேயர்களே:

பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்.ரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும்.