" "" "

இன்றைய ராசி பலன் – 18.01.2021

இன்றைய பஞ்சாங்கம், 18-01-2021, தை 05, திங்கட்கிழமை, பஞ்சமி திதி காலை 09.14 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 07.43 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் காலை 07.43 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும்.திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும்.வியாபாரத்தில் லாபம் கூடு தலாக இருக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:

உடல் நலம் சிறப்பாக இருக்கும்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

மிதுன ராசி காரர்களே:

பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். தந்தையாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சேமிப்பு உயரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.

கடக ராசி நேயர்களே:

வாகனத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவ சியம்.அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கன்னி ராசி காரர்களே:

கல்யாண முயற்சிகள் பலிதமாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும்.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

துலாராசி உறவுகளே:

எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:

குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:

செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பேசும்போது பொறுமை அவசியம்.தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.

மகர ராசி காரர்களே:

தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பிள்ளைகள் கேட்பதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். ள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.உங்கள் முயற்சிக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.அரசாங்கத்தாலும் அதிகார பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்ப ராசி உறவுகளே:

குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும்.சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள்.நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உறவினர்களால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும்.உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை.வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள்.

மீன ராசி நேயர்களே:

அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.கடன்கள் குறையும்.