" "" "

இன்றைய ராசி பலன் – 18.02.2021

இன்றைய பஞ்சாங்கம், 18-02-2021, மாசி 06, வியாழக்கிழமை, சஷ்டி திதி காலை 08.18 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பரணி நட்சத்திரம் பின்இரவு 02.54 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பின்இரவு 02.54 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

லரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப விஷயமாக சிறு பயணம் மேற்கொள்ள நேரிடும்.உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும்.பெரிய மனிதர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும்.

மிதுன ராசி காரர்களே:

விருந்தினர் வருகை உண்டு.சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும்.திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கடக ராசி நேயர்களே:

பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவு களால் நன்மை உண்டாகும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே:

பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி சிறிது சங்கடத்தைத் தரக்கூடும்.கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள்.

கன்னி ராசி காரர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவ்வப்போது மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

துலாராசி உறவுகளே:

பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள்.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.சோர்வு நீங்கி ,உற்சாகமடைவீர்கள். தந்தை வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:

உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள்.பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.பிள்ளைகளால் மனச்சங்கடம் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே:

திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்க மாக நடந்துகொள்வது நல்லது.பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை.கடன் பிரச்சினைகள் தீரும்.

மகர ராசி காரர்களே:

உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும்.மாலை யில் நண்பர்கள் மூலம் கேட்கும் செய்தி உங்களை உற்சாகப்படுத்தும்.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

கும்ப ராசி உறவுகளே:

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும்.சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். மாலையில் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள்.உறவினர்கள் வகையில் சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும்