google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

இன்றைய ராசி பலன் 18.05..2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.18-05-2019, வைகாசி 04, சனிக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை பிரதமை. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 02.21 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. வைகாசி விசாகம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

மேஷராசி நேயர்களே:மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்படக்கூடும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வாகனத்தை சரி செய்வீர்கள்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.

ரிஷபராசி அன்பர்களே: பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், அவர்களுக்காக வீண் செலவுகளும் ஏற்படக்கூடும்.சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

மிதுனராசி காரர்களே:சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.சுபகாரியங்களில் மந்த நிலை இருக்கும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.

கடகராசி நேயர்களே:பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மாலையில் நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள்.

சிம்மராசி அன்பர்களே:உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.உடன்பிறப்புகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கன்னி ராசி காரர்களே:நல்ல முன்னேற்றத்துக்கான வாய்ப்பு ஏற்படும்.ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

துலாராசி உறவுகளே: உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும்.இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும்.திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிகராசி நேயர்களே:பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படும்.திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும்.

தனுசுராசி அன்பர்களே:சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் சிறப்புடன் இருப்பார்கள். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

மகரராசி காரர்களே:எதிரிகளால் பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். அலுவலகத்தில் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பராசி உறவுகளே: தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சுபகாரிய முயற்சிகளில் தாமதபலன் ஏற்படும்.சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மீனராசி நேயர்களே:சந்திராஷ்டமம் நீடிப்பதால் உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும்.சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள்.

வேலை வாய்ப்பு!!

புரட்சி வானொலியின் தமிழக செய்திச் சேவைக்கு பணியாளரைத் தேடுகின்றோம். இந்த தகமைகள் உங்களிடம் இருக்கா? ஏன் தாமதம், இப்பொழுதே விண்ணப்பியுங்கள்.

* வீட்டில் இருந்தவாறே பணி புரியலாம்.

* கணினி மற்றும், அதி வேக இணைய வசதி அவசியம்

* தமிழில் ஒரு நிமிடத்திற்கு 30-45 சொற்கள் வழுவின்றி தட்டச்சு செய்யும் தகுதி இருத்தல் அவசியம்

* கணினி அறிவும், Photo Editing – Photo Shop தெரிந்திருத்தல் அவசியம்.

* சம கால அரசியல், சினிமா மற்றும் மருத்துவம் , தொழில்நுட்பம் உள்ளிட்ட பத்திரிகைத் துறை சார் விடயங்கள் நன்கு அறிந்திருத்தல் அவசியம்.

* எழுத்தார்வம், விமர்சனம் எழுதும் திறன் அவசியம் இருத்தல் வேண்டும்.

* சமூக வலைத் தளங்கள், இணையம் , செய்தி இணையம் பற்றி நன்கு பரிச்சயம் உள்ள நபராக இருத்தல் அவசியம்.

இந்தத் தகமைகள் அனைத்தும் உங்களிடமிருந்தால், இப்பொழுதே உங்கள் சுய விபரக் கோவையினை அழகு தமிழில் வடிவமைத்து [email protected] எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

தகுதியான, திறமையுள்ள தெரிவு செய்யப்பட்ட நபருடன் நாம் தொடர்பு கொள்கின்றோம்.

நேர்முகத் தேர்வு நடை முறை,

தொலைபேசி மற்றும் காணொளி தொடர்பாடல் மூலம் நேர்முகத் தேர்வு இடம் பெறும்.

நல் வாழ்த்துகள்!!