" "" "

இன்றைய ராசி பலன் – 18.07.2021

இன்றைய பஞ்சாங்கம், 18-07-2021, ஆடி 02, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி இரவு 12.29 வரை பின்பு வளர்பிறை தசமி. சுவாதி நட்சத்திரம் இரவு 12.08 வரை பின்பு விசாகம். சித்தயோகம் இரவு 12.08 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். கரி நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

மேஷ ராசி நேயர்களே:நண்பர்களின் சந்திப்பு நற்பலனை அளிக்கும்.சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.பணவரவு தாராளமாக இருக்கும்.தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

ரிஷப ராசி அன்பர்களே:சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். எதிரிகள் பணிந்து வருவார்கள்.பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். பிறருக்குக் கொடுத்து வராமல் இருந்த கடன் தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.நண்பர்களின் சந்திப்பு நற்பலனை அளிக்கும்.

மிதுன ராசி காரர்களே:வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். தாய்மாமன் வழியில் எதிர் பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கடக ராசி நேயர்களே:வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். ந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள்.குடும்பத் தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள் வார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி ராசி காரர்களே:உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும்.குடும்பத்தில் உள்ளவர்களின் தேவை களை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படும்.பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்பு களைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும்.

துலாராசி உறவுகளே:குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும்.கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பொறுமை அவசியம்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் செலுத்தவும்.பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.திடீர் செலவுகளால் கையிருப்பு குறைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு தோன்-றலாம். பிள்ளைகள் வழியில் தேவையற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டு சங்கடம் தரக்கூடும்.பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும்.வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.

தனுசு ராசி அன்பர்களே: உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதர சகோதரிகள் வழியில் சாதகமான பலன் கிட்டும். சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும் கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல் வது நல்லது.

மகர ராசி காரர்களே:வீட்டில் பெரியவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும்.பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுசரித்துச் செல்வது நல்லது. ஆன்மீக பயணங்கள் செல்ல நேரிடும்.சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கும்ப ராசி உறவுகளே:வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும்.தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். கண வன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம்.குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மீன ராசி நேயர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வெளிப் பயணங்களில் கவனம் வேண்டும்.