" "" "

இன்றைய ராசி பலன் – 18.09.2020

இன்றைய பஞ்சாங்கம், 18-09-2020, புரட்டாசி 02, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 12.51 வரை பின்பு வளர்பிறை துதியை. உத்திரம் நட்சத்திரம் காலை 06.59 வரை பின்பு அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 04.06 வரை பின்பு சித்திரை. சித்தயோகம் காலை 06.59 வரை பின்பு அமிர்தயோகம் பின்இரவு 04.06 வரை பின்பு சித்த யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம், இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மேஷ ராசி நேயர்களே:

வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:

உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும்.உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

மிதுன ராசி காரர்களே:

அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கு வது நல்லது.வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே:

சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.சுப நிகழ்ச்சிகளிலும் விருந்தினர்களின் வருகையாலும் வீடு களை கட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும்.

சிம்ம ராசி அன்பர்களே:

மற்றவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேசும்போது பொறுமை அவசியம்.மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பணவரவுகள் சற்று சுமாராக இருக்கும்.

கன்னி ராசி காரர்களே:

திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உருவாகும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உரிமையை பெறுவீர்கள்.

துலாராசி உறவுகளே:

பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பார்த்த காரியம் முடிவது மகிழ்ச்சி தரும்.பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:

திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே:

அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். பணவரவு ஏற்பட்டு கடன் பிரச்சனை ஒரளவு குறையும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

மகர ராசி காரர்களே:

சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது.பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மாலையில் தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். முன்கோபத்தை குறையுங்கள். முக்கிய முடிவு களை ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள்.உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள்.

மீன ராசி நேயர்களே:

மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் கிட்டும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.மனைவி வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும்.நண்பர்களின் உதவியால் பண பிரச்சனைகள் ஓரளவு குறையும்.