" "" "

இன்றைய ராசி பலன் – 19.01.2021

இன்றைய பஞ்சாங்கம், 19-01-2021, தை 06, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பகல் 10.59 வரை பின்பு வளர்பிறை சப்தமி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 09.54 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் காலை 09.54 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.உடல்நலத்தில் கவனம் தேவை .

ரிஷப ராசி அன்பர்களே:

பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

மிதுன ராசி காரர்களே:

வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும்.உடன்பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

கடக ராசி நேயர்களே:

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்துவிடும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்.சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

கன்னி ராசி காரர்களே:

பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சுபகாரியங்களில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும்.புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

துலாராசி உறவுகளே:

வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.சுபமுயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

விருச்சிக ராசி நேயர்களே:

நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். தாய்மாமன் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும்.தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும்.நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும்.பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:

தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும்.பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள் கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வீண்செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும்.உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும்.

மகர ராசி காரர்களே:

குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

கும்ப ராசி உறவுகளே:

தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்குமேல் நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

மீன ராசி நேயர்களே:

வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.மாலையில் உறவினர்கள், நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும்.