" "" "

இன்றைய ராசி பலன் – 19.02.2021

இன்றைய பஞ்சாங்கம், 19-02-2021, மாசி 07, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பகல் 10.58 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 05.57 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பின்இரவு 05.57 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை – ரத சப்தமி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

மனப்பக்குவம் கிடைக்கும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்.கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும்.

மிதுன ராசி காரர்களே:

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.உறவினர் நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி நேயர்களே:

எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும்.உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிடாதசெலவுகளை போராடி சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பப் பொறுப்பு களை முடிப்பதில் சற்று அலைச்சல் ஏற்படும்.பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும்.கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே:

மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.நண்பர்களிடம் மன விட்டுப் பேசுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

கன்னி ராசி காரர்களே:

காலை 09.40 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.உத்தியோகத்தில் சகஊழியர்களால் சங்கடங்கள் வரும்.

துலாராசி உறவுகளே:

ராசிக்கு காலை 09.40 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும்.வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:

காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக் கும்.மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே:

கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். சிலருக்கு தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

மகர ராசி காரர்களே:

உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.வேற்றுமதத்தவர் உதவுவார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும்.

கும்ப ராசி உறவுகளே:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்துபோகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் பணவிரயத்துக்கு வாய்ப்பு உண்டு.வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.

மீன ராசி நேயர்களே:

பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும்.