" "" "

இன்றைய ராசி பலன் – 19.07.2021

இன்றைய பஞ்சாங்கம்,19-07-2021, ஆடி 03, திங்கட்கிழமை, தசமி திதி இரவு 10.00 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. விசாகம் நட்சத்திரம் இரவு 10.27 வரை பின்பு அனுஷம். மரணயோகம் இரவு 10.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:ராசிக்கு பிற்பகல் 04.53 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் சற்று கோபத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே:கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.எதிரிகளின் சூழ்ச்சிகளை முறிய டிப்பீர்கள்.உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

மிதுன ராசி காரர்களே:காலையில் பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாலையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கக்கூடும்.வீட்டை அழகுபடுத்துவீர்கள். குடும்பத் தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும்.நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி நேயர்களே:சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:திடீர் பண வரவு ஏற்படும்.சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி யிருக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.பிள்ளைகள் கல்வி சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.எதிர்பாராத பண வரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.

கன்னி ராசி காரர்களே:பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக் கவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. எதிர்பாராத வேலைச்சுமையின் காரணமாக சற்று சோர்வு உண்டாகும்.ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாராசி உறவுகளே:சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்து விடுவீர்கள்.எதிர்பாராத செலவுகளால் பணநெருக்கடிகள் உண்டாகும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.அழகும் இளமையும் கூடும்.

விருச்சிக ராசி நேயர்களே:எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.செய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்.உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். கணவனும் மனை வியும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே:யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். குடும்பத்தில் உங்கள் அலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும்.பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.உறவினர் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மகர ராசி காரர்களே:உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கும்ப ராசி உறவுகளே:தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும்.உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.வியாபாரத்தை பெருக்குவீர்கள்.

மீன ராசி நேயர்களே:

ராசிக்கு பிற்பகல் 4.53 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும்.ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.