" "" "

இன்றைய ராசி பலன் – 20.01.2021

இன்றைய பஞ்சாங்கம், 20-01-2021, தை 07, புதன்கிழமை, சப்தமி திதி பகல் 01.15 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. ரேவதி நட்சத்திரம் பகல் 12.36 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

கடன்கள் குறையும்.குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர் நண்பர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும்.குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே

ரிஷப ராசி அன்பர்களே:

சிலருக்கு பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும்.பெற்றோரின் ஆதரவு கிட்டும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

மிதுன ராசி காரர்களே:

பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.கடன்கள் குறையும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு.உறவினர் நண்பர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும்.

கடக ராசி நேயர்களே:

தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும்.பகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

சிம்ம ராசி அன்பர்களே:

ராசிக்கு பகல் 12.36 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். தாயின் உடல்நலனில் அக்கறை காட்டவும்.மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

கன்னி ராசி காரர்களே:

ராசிக்கு பகல் 12.36 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படும்.குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.புதிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும்.

துலாராசி உறவுகளே:

பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.சிலருக்கு தெய்வ வழி பாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

விருச்சிக ராசி நேயர்களே:

பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.தாய்வழி உறவுகளுக்காகச் செலவு செய்யவேண்டி வரும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும்.வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள்.மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே:

எடுத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார்.யோகா தியானத்தில் மனம் லயிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.

மகர ராசி காரர்களே:

அரசு காரியங்கள் வெற்றியடையும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிரபலங்களை சரியாகப் பயன்படுத்தி கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். காரிய அனுகூலம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்ப ராசி உறவுகளே:

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். சிலருக்கு உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை.குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.

மீன ராசி நேயர்களே:

வேலையாட்களை அனுசரித்து போங்கள்.வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் உண்டாகும்.அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். தாய்மாமன் வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும்.