" "" "

இன்றைய ராசி பலன் – 20.07.2021

இன்றைய பஞ்சாங்கம்,20-07-2021, ஆடி 04, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி இரவு 07.18 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அனுஷம் நட்சத்திரம் இரவு 08.32 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் இரவு 08.32 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள்.உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே:புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும்.கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும்.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

மிதுன ராசி காரர்களே:நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் திறன் அதிகரிக்கும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.

கடக ராசி நேயர்களே:வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.வியாபாரத்தில் நவீன உத்திகளைக் கையாளுவீர்கள்.தந்தைவழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவைப்படுகிறது. உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும்.

கன்னி ராசி காரர்களே:புத்திர வழியில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.தந்தையின் தேவையை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும்.

துலாராசி உறவுகளே:உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும்.சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வழக்கமான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும்.பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:பிள்ளைகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். பணப்புழக்கம் இருந்தாலும் திடீர் செலவுகளால் கையிருப்பு குறையக்கூடும்.திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

மகர ராசி காரர்களே:காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சொத்துக்கள் வழியில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.வெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும். உறவினர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.

கும்ப ராசி உறவுகளே: பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மீன ராசி நேயர்களே:

புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும்.சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல்நலனில் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள்.வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும்.உறவினர் நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள்.