" "" "

இன்றைய ராசி பலன் – 21.01.2021

இன்றைய பஞ்சாங்கம், 21-01-2021, தை 08, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பகல் 03.50 வரை பின்பு வளர்பிறை நவமி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 03.36 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பகல் 03.36 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:

வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

மிதுன ராசி காரர்களே:

உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும்.சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். இழுபறியாக இருந்த முக்கியமான காரியம் ஒன்று அனுகூலமாக முடியும்.வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.வெளிவட்டாரத்தில் செல்வாக்குகூடும்.

கடக ராசி நேயர்களே:

பணகஷ்டம் குறையும்.சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை யைக் கடைப்பிடிக்கவும்.உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி ராசி காரர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணையால் செலவுகள் உண்டாகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உடல்நலனில் கவனமாக இருக்கவும்.குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம்.செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள்.

துலாராசி உறவுகளே:

நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார்.கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். தந்தை வகையில் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.பிள்ளைகளால் மதிப்பு கூடும்.

விருச்சிக ராசி நேயர்களே:

அரசால் ஆதாயம் உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள்.பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொண்டாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பழைய சொந்தம் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.

தனுசு ராசி அன்பர்களே:

உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.

மகர ராசி காரர்களே:

பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டுஎதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையக்கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவு தருவார்.நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கும்ப ராசி உறவுகளே:

சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.

மீன ராசி நேயர்களே:

வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சித் தங்கும். சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும்.உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.