" "" "

இன்றைய ராசி பலன் – 21.07.2021

இன்றைய பஞ்சாங்கம், 21-07-2021, ஆடி 05, புதன்கிழமை, துவாதசி திதி மாலை 04.26 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. கேட்டை நட்சத்திரம் மாலை 06.30 வரை பின்பு மூலம். சித்தயோகம் மாலை 06.30 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத் துணைவர் வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.

ரிஷப ராசி அன்பர்களே:உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும்.பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

மிதுன ராசி காரர்களே:வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.உடல் ஆரோக்கியம் மேம்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கடன் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கடக ராசி நேயர்களே:நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும்.பணம் கொடுக்கல் வாங்கலில் சில இடையூறுகள் ஏற்படலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

கன்னி ராசி காரர்களே:திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.வாழ்க்கைத் துணைவரால் மகிழ்ச்சி உண்டாகும்.சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

துலாராசி உறவுகளே:உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:பிள்ளைகளின் பழகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும்.உறவினர் நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம்.பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

தனுசு ராசி அன்பர்களே:எதிர்பாராத திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.கணவன்-மனைவி அனுசரித்து போவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.வாழ்க்கைத்துணைவர் வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.எதிர்பாராத திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள்.

மகர ராசி காரர்களே:பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும்.தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.பழைய சிக்கலில் ஒன்று தீரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்ப ராசி உறவுகளே:றவினர்கள் நண்பர்களால் அனுகூலம் உண்டு.சகோதரர்கள் பண உதவி செய்வார்கள்.உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உங்களை தவறாக வைத்துக் கொண்டிருந்தவர்கள் சிலரின் மனசு மாறும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

மீன ராசி நேயர்களே:

எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும்.சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படும்.