" "" "

இன்றைய ராசி பலன் – 22.01.2021

இன்றைய பஞ்சாங்கம், 22-01-2021, தை 09, வெள்ளிக்கிழமை, நவமி திதி மாலை 06.29 வரை பின்பு வளர்பிறை தசமி. பரணி நட்சத்திரம் மாலை 06.40 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தாரை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

உடல் அசதி சோர்வு வந்து நீங்கும்.நேரத்துக்குச் சாப்பிடமுடியாத படி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி காரர்களே:

தந்தைவழி உறவினர்களால் காரிய அனுகூலமாகும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும்.பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள்.சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி நேயர்களே:

பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.. பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும்.காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும்.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

கன்னி ராசி காரர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.பணவரவு சுமாராக இருக்கும்.

துலாராசி உறவுகளே:

கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும்.விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:

அரசால் அனுகூலம் உண்டு. மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உறவினர்கள் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.வியாபாரத்தில் லாபம் பெருகும்.

தனுசு ராசி அன்பர்களே:

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.

மகர ராசி காரர்களே:

றரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம்.வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும்.கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.தாயாருக்கு கை கால் வலி வந்து போகும்.

கும்ப ராசி உறவுகளே:

மறைமுக அவமானம் வந்து நீங்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படுவார்கள்.சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.உத்தியோகத்தில் கவனம் தேவை.

மீன ராசி நேயர்களே:

நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவார்.கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்த மோதல்கள் விலகும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.