" "" "

இன்றைய ராசி பலன் – 22.07.2021

இன்றைய பஞ்சாங்கம், 22-07-2021, ஆடி 06, வியாழக்கிழமை, திரியோதசி திதி பகல் 01.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. மூலம் நட்சத்திரம் மாலை 04.25 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். வாழ்க்கைத் துணையுடனான மன வருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.அலுவலகத்தில் வேலைபளு கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.பிள்ளைகளின் பிடிவாதம் சற்று வருத்தம் தரும்.தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும்.உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.

மிதுன ராசி காரர்களே:மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள்.உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னைகள் சுமுகமாக முடியும்.குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள்.

கடக ராசி நேயர்களே:உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக்கூடும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.நீண்ட நாள் எதிர்பார்த்த தொழில் ரீதியான வங்கி கடன் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே:சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஒரு சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

கன்னி ராசி காரர்களே: பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.நண்பர்களின் ஆலோசனைகளால் தொழில் ரீதியான பிரச்சினைகள் குறையும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம்.இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

துலாராசி உறவுகளே:உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.உடல் உபாதைகள் நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். அனுசரித்துச் செல்வது நல்லது.திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலருக்கு, வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள நேரிட்டால் தகுந்த பாது காப்பு நடவடிக்கைகள் அவசியம்.அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:இழுபறியாக இருந்தவேலைகள் முடியும்.சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும்.தொழிலில் சிறுசிறு மாறுதல் செய்தால் லாபம் அடையலாம். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கடன் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே:சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத சுபசெலவுகள் தோன்றும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லுங்கள். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மகர ராசி காரர்களே: தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும்.வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.உடன்பிறந்தவர்களால் அலைச்சல் வீண் செலவுகள் வந்து போகும். உங்களுடைய முயற்சி களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

கும்ப ராசி உறவுகளே:நண்பர்கள் உதவிகரம் நீட்டுவர்.எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும்.ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.அலுவலகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம்.

மீன ராசி நேயர்களே:

உங்கள் தேவையை அறிந்து தந்தை பண உதவி செய்வது மகிழ்ச்சி தரும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும்.சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.